நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் - கச்சா எண்ணெய் இறக்குமதி தொகையை இந்திய ரூபாயில் பெற முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தல்

Oct 16 2018 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அவற்றின் விலைகளை குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் காலித் அல் பாலி, ஐக்கிய அரபு அமைச்சர் மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், கலந்துகொண்டனர். இந்தக்‍ கூட்டத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் உயருகிறது என்றும் இந்த விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய சவுதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் காலித் அல் பாலி, ஈரான் மீது அமேரிக விதித்துள்ள பொருளாதாரதடையால் ஏற்படும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சவுதி அரேபியா ஈடு செய்யும் என்று உறுதி அளித்தார். மேலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00