புதுச்சேரி மாநில வளர்ச்சிக்‍காக தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி வசூல் செய்ததை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புக் கொண்டுள்ளார் - முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Oct 15 2018 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்‍காக தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி வசூல் செய்ததை துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடியே ஒப்புக்‍ கொண்டுள்ளதாக முதலமைச்சர் ​திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சி.எஸ்.ஆர். எனப்படும் மாநில வளர்ச்சிக்‍கான தனியார் நிதியை துணைநிலை ஆளுநர் அலுவலகம் தனது அதிகார வரம்பை மீறி திரட்டியுள்ளதாக முதலமைச்சர் திரு. நாராயணசாமி, குற்றம்சாட்டி இருந்தார். இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதனை துணைநிலை ஆளுநர் திருமதி. கிரண்பேடி மறுத்திருந்தார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு. நாராயணசாமி, சி.எஸ்.ஆர். நிதி திரட்டப்பட்டுள்ளதை ஆளுநரே ஒப்புக்‍கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் அவர் தனது அதிகாரதை துஷ்பிரோகம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00