தொழிலதிபர் நெஸ்வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு : மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது
Oct 11 2018 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலதிபர் நெஸ்வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கை மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2014ம் ஆண்டு நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், தன்னுடைய முன்னாள் காதலனும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான நெஸ் வாடியா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, நடிகை ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்டார். இதுதொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, நேற்று விசாரணை நடைபெற்ற போது, நெஸ்வாடியாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.