விஜய் மல்லையாவின் லண்டன் வங்கி கணக்கில் இருந்து, சுவிஸ் வங்கி கணக்குக்கு, 170 கோடி ரூபாய் பண பரிமாற்றம் - தகவல் அளித்தும் தடுக்கமுடியாத அவலம்

Sep 20 2018 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜய் மல்லையாவின் லண்டன் வங்கி கணக்கில் இருந்து, சுவிஸ் வங்கி கணக்குக்கு, 170 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்த விபரம், சி.பி.ஐ.,க்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலதிபர் விஜய் மல்லையா, எஸ்.பி.ஐ., உட்பட பல்வேறு வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2015ல், வெளிநாடு தப்பிச் சென்றார். அதே ஆண்டு, விசாரணைக்கு ஆஜராவதற்காக, இந்தியா திரும்பினார். அப்போது, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டும் மல்லையா கைது செய்யப்படவில்லை. கைது செய்ய சட்ட ரீதியாக போதிய காரணங்கள் இல்லாததால், மல்லையாவை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், 2017ல், விஜய் மல்லையாவின் லண்டன் வங்கி கணக்கில் இருந்து, 170 கோடி ரூபாய், அவரது சுவிஸ் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரிட்டன் பொருளாதார புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் இந்த பணப்பறிமாற்றத்தை அப்போது இந்திய வங்கிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, மல்லையாவுக்கு கடன் வழங்கிய, 13 வங்கிகளும் ஒன்றிணைந்து, பிரிட்டனில் உள்ள அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00