வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-42 ராக்‍கெட் : அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Sep 17 2018 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள, 1-வது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட், நேற்றிரவு 10 மணி 8 நிமிடங்களில் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன.

நோவாசர் செயற்கைகோள், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

நோவாசர், 445 கிலோவும், எஸ்1-4, 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில், இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் 17 நிமிடம் 45 வினாடிகளில், நிலை நிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் திரு.சிவன், அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00