மாநிலங்களவை தேர்தலில், நோட்டாவை அறிமுகப்படுத்த கூடாது - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக தகவல்

Sep 12 2018 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில், நோட்டாவை அறிமுகப்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் விருப்பத்திற்காக 'நோட்டா'வை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் 'நோட்டா' ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து டெல்லியல் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் மாநில, யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவை தேர்தல்களில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது என்றும், தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் ஓட்டுச்சீட்டில் 'நோட்டா' பிரிண்டிங் செய்யப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00