பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் பரபரப்பு புகார் : குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தல்

Aug 14 2018 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேட்புமனுவில் கடன் விவரங்களை மறைத்ததாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மீது, தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ், விவேக் தங்கா ஆகியோர் அடங்கிய குழுவினர், தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், குஜராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் அமித் ஷா தனது 2 சொத்துகளை அடகு வைத்து, தனது மகனுக்காக 25 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுவில், இந்த கடன் விவரத்தை குறிப்பிடாமல், அமித் ஷா மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, அமித் ஷா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00