மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்

Aug 13 2018 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்‍கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மக்‍களவை முன்னாள் சபாநாயகர் திரு. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும், நாடாளுமன்றத்தில் அவர் துடிப்புமிக்‍க வகையில் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இந்திய மக்‍களுக்‍கு ஒரு பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ள திரு. ராம்நாத் கோவிந்த், திரு. சோம்நாத் சாட்டர்ஜியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்‍கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதாக கூறியுள்ளார்.

திரு. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு துயரமளிப்பதாக குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.​ நாடாளுமன்ற உறுப்பினராக 10 முறை தேர்ந்தெடுக்‍கப்பட்ட திரு. சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு, மக்‍களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்ததாகவும், தனது கொள்கையின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும் திரு. வெங்கையா நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திடகாத்திரமான அரசியல் தலைவராக திரு. சோம்நாத் சட்டர்ஜி செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை உயர்த்தியவர் என்றும், ஏழை மக்‍களின் நலனுக்‍காக வலுவான குரல் எழுப்பியவர் திரு. சோம்நாத் சட்டர்ஜி என்றும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள திரு.மோடி, சோம்நாத்தின் குடும்பத்தினருக்‍கு தனது இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கட்சியைக்‍ கடந்து அனைத்து தரப்பினரிடமும் பெரும் மதிப்பிற்குரியவராகவும், ஈர்க்‍கப்பட்டவராகவும் விளங்கியவர் திரு. சோம்நாத் சட்டர்ஜி என பெருமிதம் தெரிவித்துள்ளார். இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக்‍கொள்வதாக திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00