ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு திட்டம் ரத்து : நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை - மத்திய அரசு

Aug 10 2018 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை, ஆண்டுக்கு இருமுறை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்‍கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது அந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்‍கை நடைபெற்று வரும் நிலையில், ஃபிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆன்லைனில் தேர்வை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார்.

தற்போது, இத்தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 2019ல் பேப்பர் - பேனா எழுத்து முறையிலேயே நீட் தேர்வை நடத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00