யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்‍கு சீல் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Aug 9 2018 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
வனப்பகுதியை ஒட்டிய யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருக்‍கும் கட்டடங்கள் மற்றும் விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்‍ காலமாக நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் போன்ற விலங்கினங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. யானைகளின் வழித்தடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான திரு.யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி யானை வழித்தடங்களில் அமைந்திருக்கும் அங்கீகாரமற்ற கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இதுபோன்ற கட்டடங்களுக்கு உரிய அனுமதி பெறாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள யானை வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில் கட்டப்பட்டிருக்‍கும் அனுமதி பெறாத கட்டடங்கள், விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு சீல் வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3044.00 Rs. 3223.00
டெல்லி Rs. 3056.00 Rs. 3237.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00