டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி - டாலருக்‍கு 7 காசுகள் சரிந்து 69 ரூபாய் 12 காசாக வீழ்ச்சியடைந்தது

Jul 20 2018 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 69 ரூபாய் 12 காசுகளாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதால், தற்போது அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள், தனது முதலீட்டைக் குறைத்து வருவதால் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாகவும் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 69 ரூபாய் 12 காசுகளாக உள்ளது.

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளதாலும், உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களாலும், இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மும்பை பங்குச்சந்தை இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 509 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரம் புள்ளிகளாகவும் இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00