தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை : வாட்ஸ்-அப் செயலிக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Jul 20 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாட்ஸ்-அப் செயலி மூலம் வன்முறைக்கு வித்திடும் வதந்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்படுவதைத் தடுக்காவிட்டால், அந்நிறுவனம் சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சமூக வலைதளச் செயலிகளில் பிரதானமாக விளங்கும் வாட்ஸ்-அப், இந்தியாவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப ரீதியில் அதில் பல்வேறு பயன்கள் இருந்தாலும், அதன் வாயிலாக பல தவறான செய்திகள் பரப்பப்படுகிறது.

குறிப்பாக, குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தும் கும்பல் என வதந்திகள் வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படுகிறது. இதனை நம்பி, பல்வேறு இடங்களில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இத்தகைய தவறான செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில், வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வதந்திகளும், பொய் தகவல்களும் பரவுவதைத் தடுக்காமல், அதை வாட்ஸ்-அப் நிறுவனம் வேடிக்கை பார்க்குமானால், சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், விரும்பத்தகாத சம்பவங்களுக்கு அந்நிறுவனம் உடந்தையாக இருப்பதாகக் கருதி, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00