டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்‍கு : கேரளாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு

Jul 17 2018 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லியில் கொல்டக் கன்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. Minto பாலத்திற்கு அடியில் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீரில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழந்துள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்‍கள் இன்னலுக்‍கு ஆளானார்கள். இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், 2 ஆயிரம் குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடித்து ஓடியது. குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக்கிடக்கின்றனர். மும்பையில் கடல் சீற்றம் அதிக அளவில் காணப்பட்டது.

குஜராத் மாநிலம் வசிபோரா கிராமத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில், கனமழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். கனமழை காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00