கூட்டணி ஆதரவுடன் முதலமைச்சர் பதவியில் இருப்பது மனவேதனையளிக்கிறது : கர்நாடக முதலமைச்சர், தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் மல்க பேச்சு

Jul 15 2018 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டணி அரசின் முதலமைச்சராக இருப்பது, தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்றும், தனக்கு நெருக்கடி அதிகமானால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமி மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் திரு. குமாரசாமி, முதலமைச்சராக இருந்து வருகிறார். பெங்களூருவில், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், தான் முதலமைச்சராக இருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், தனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை எனக் கூறினார். கூட்டணி அரசுக்கு தலைமையேற்றிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் கண்ணீர் சிந்தியபடி அவர் பேசியது, கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது முதலமைச்சர் பதவி, மலர்களால் ஆன படுக்கை இல்லை என்றும், இந்தப் பதவிக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்பட்டால், சிலமணி நேரங்களிலேயே அதனை ராஜினாமா செய்ய, தான் தயாராக இருப்பதாகவும், தொண்டர்கள் மத்தியில் திரு. குமாரசாமி மனவேதனையுடன் கூறினார்.

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, திரு. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அமைச்சர் பதவி தொடர்பாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து, குமாரசாமிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00