ரயில் நிலையங்களில் "செல்ஃபி" எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் : ரெயில்வே வாரியம் அறிவிப்பு

Jun 22 2018 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரயில் நிலையங்களில் "செல்ஃபி" எடுப்பவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக, செல்ஃபோன்கள் மூலம், காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரயில் செல்லும்போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் "செல்ஃபி" எடுக்கின்றனர்.

இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட, தற்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து "செல்ஃபி" எடுக்கும்போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனைத்தடுக்க, ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து "செல்ஃபி" எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல் ரயில் நிலைய வளாகத்தில், ஆபத்தான முறையில் "செல்ஃபி" எடுப்பவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல, ரயில் நிலைய வளாகத்தில், குப்பைத் தொட்டியைத் தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00