ஸ்டெர்லைட் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு முன்வராத தமிழக அரசு : காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

May 24 2018 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் பிரச்னை தொடர்பாக எடப்பாடி அரசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தங்களை திணிக்‍க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. குலாம் நபி ஆசாத், தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட்டுக்‍கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்‍கிச் சூட்டில் 10க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். இப்பிரச்னை தொடர்பாக தமிழக அரசு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை எனக்‍ குறிப்பிட்ட அவர், தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை திணிக்‍க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் எடுக்‍க தமிழக அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர், உயிரிழப்புகளை எந்த இழப்பீடுகளாலும் ஈடுசெய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00