கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

May 23 2018 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் திரு. குமாரசாமி இன்று பதவியேற்றார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் திரு. ஜி. பரமேஸ்வராவும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்‍கொண்டார். அவர்களுக்‍கு ஆளுநர் திரு. வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், சோனியாகாந்தி, ராகுல், மம்தாபானர்ஜி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விதான்செளதாவில் இன்று திரு. H.D. குமாரசாமிக்‍கும், திரு. பரமேஸ்வராவுக்‍கும், கர்நாடக ஆளுநர் திரு. வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியக்‍காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில், ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸுக்கு 22 அமைச்சர் பொறுப்புகளும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 12 அமைச்சர் பொறுப்புகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், சபாநாயகராக காங்கிரஸைச் சேர்ந்தவரும், துணை சபாநாயகராக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவரும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

மேலும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான இலாகாக்கள் முடிவுசெய்யப்படும் என்றும் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00