தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு : தேர்தல் முடிவுகள் வெளியிடக்கூடாது - உச்சநீதிமன்றம்

Apr 20 2018 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த விதிக்‍கப்பட்டிருந்த தடையை நீக்‍கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், தேர்தல் முடிவுகளை வெளியிடக்‍கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் எடப்பாடி நிர்வாகத்தினர் வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டு மாற்றுக்‍ கட்சியினரை போட்டியிடவிடாமல் தடுத்து, தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்து வந்தனர்.

இதனையடுத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, அதனை நிறுத்தி வைக்‍கக்‍கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் மனுதாக்‍கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்‍கில், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடவடிக்‍கைகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடைவிதித்தது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் விரிவான பதில்மனு தாக்‍கல் செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இதனையடுத்து, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டதை அடுத்து, அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களைக்‍ கேட்டறிந்த நீதிபதிகள் அடங்கிய குழு, தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை விதித்த தடையை நீக்‍கி உத்தரவிட்டனர். மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்திக்‍கொள்ளலாம் என்றும், ஆனால் அதன் முடிவுகளை வெளியிடக்‍கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், வழக்‍கு விசாரணையை அடுத்த மாதம் 3-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00