உலகின் சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் திருட முடியாத அளவுக்கு ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை - தனித்துவ அடையாள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்‍கம்

Mar 23 2018 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் திருட முடியாத அளவுக்கு ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தனித்துவ அடையாள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்‍கமளித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்‍கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்‍கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதாரில் இடம்பெற்றுள்ள தனிநபர் தகவல்கள் பாதுகாப்பின்றி அவ்வப்போது இணையங்களில் வெளியாவது குறித்தும் பல்வேறு வழக்‍குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆதார் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தின் பாதுகாப்பு, அனைத்து கட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், இது குறித்து தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி மூலம் Power Point எனப்படும் கணினி செயல் விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று வழங்கியது.

பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் விளக்‍கமளித்த தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி, இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளதோ, அதைக் காட்டிலும் 8 மடங்கு கூடுதல் பாதுகாப்பு, ஆதார் தகவல்களுக்கு உள்ளதாக தெரிவித்தார். மேலும், உலகின் சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் திருட முடியாத அளவுக்கு ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்‍கமளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00