மஹாராஷ்டிராவில் காலிஃபிளவர் விலை கடும் வீழ்ச்சி : விரக்தியால் தனது தோட்டத்தை சேதப்படுத்திய விவசாயி

Mar 22 2018 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலிஃபிளவர் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்களை சேதப்படுத்தினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாற்பதாயிரம் விவசாயிகள் நாடு முழுவதையும் தங்களின் பக்கம் ஈர்க்கும் வகையில், 180 கிலோ மீட்டர் தூரம் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த நிகழ்வை யாரும் மறக்க முடியாத நிலையில், மற்றொரு விவசாயி ஒருவரின் செய்கையானது மீண்டும் அந்த மாநிலத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள கெகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம் சிங் என்பவர், தனது நிலத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்தார். நன்கு விளைந்த காய்களை சந்தைக்கு எடுத்துச் சென்ற போது, அங்கு காலிஃபிளவர் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஒருகிலோ வெறும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் அந்த விவசாயி விரக்தி அடைந்தார். இதையடுத்து, தனது தோட்டத்திற்கு சென்ற அந்த விவசாயி, ஆத்திரத்தில் நிலத்தில் விளைந்திருந்த காலிஃபிளவர் காய்களை பிடுங்கி எறிந்து, சேதப்படுத்தினார். இந்த சம்பவம் மற்ற விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00