அணு ஆயுத வல்லமையுடன் எதிரிகளின் இலக்‍கை துல்லியமாக தாக்‍கி அழிக்‍கும் அக்‍னி-2 ஏவுகணை - வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

Feb 20 2018 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்‍குகளை அழிக்‍கும் திறன் கொண்ட அக்‍னி-2 ஏவுகணை சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் அதிநவீன ஏவு கணைகளை உருவாக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவிடம் பிருத்வி, தனுஷ், அக்னி ஆகிய ஏவுகணைகள் உள்ளன. அக்‍னி வகை ஏவுகணைகளில் அக்னி 5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்ததாகும்.

இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு, இரண்டாயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்‍குகளை தாக்‍கும் வல்லமை கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஒடிஷாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று காலை 8.38 மணிக்கு‍ இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்ட அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்கும் திறன் படைத்தவை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00