இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட தீவிரவாதி கைது

Jan 23 2018 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவால் தேடப்படும் தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான தீவிரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதற்கு சதி திட்டம் தீட்டியவனும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மென்பொறியாளருமான அப்துல் சப்ஹான் குரோஷியை, தேசிய புலனாய்வு கழகத்தினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் டெல்லி காஸிப்பூரில் பதுங்கியிருந்ததையறிந்த போலீசார், அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் குரோஹி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி, இந்தியன் முஜாகிதீன் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. கைதான குரோஷியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குரோஷி கைது செய்யப்பட்டதன் மூலம், வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என, காவல் ஆணையர் பிரமோத் குஷ்வாகா கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00