மே மாதம் 6-ம் தேதி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு - CBSE பாடத்திட்டத்தின் படியே நீட் தேர்வு வினாத்தாள்கள் இடம்பெறும் என அறிவிப்பு

Jan 22 2018 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடக்கும் என CBSE அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதனால், மற்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது உயிரையே மாய்த்துக் கொண்டார்.

இந்தநிலையில், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் படியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், MBBS, BDS மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுகள் வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00