நலத்திட்டங்களுக்‍காக ஆதார் எண்ணை இணைக்‍க கட்டாயப்படுத்தக்‍கூடாது - உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு இடைக்‍கால உத்தரவு

Dec 15 2017 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசின் நலத்திட்ட உதவிகளுக்‍கு ஆதார் எண்ணை இணைக்‍க மக்‍களை கட்டாயப்படுத்தக்‍கூடாது என மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இடைக்‍கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், வங்கி கணக்‍குகள், செல்ஃபோன் எண் போன்றவற்றுக்‍கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பல்வேறு தரப்பில் இருந்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்‍குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரான வழக்குகள், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்‍கு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்‍கில் இன்று இடைக்‍கால உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளுக்‍கு ஆதார் எண்ணை இணைக்‍க மக்‍களை கட்டாயப்படுத்தக்‍கூடாது என மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இடைக்‍கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்‍கள் விருப்பத்தின் பேரிலேயே ஆதார் எண் இணைக்‍கப்பட் வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், வங்கி கணக்‍கு எண், மொபைல் எண் போன்றவற்றுடன் ஆதாரை இணைக்‍க, மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்த கருத்தும் ஏற்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00