பாரத ஸ்டேட் வங்கி 1,300 கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடுகள் அதிரடியாக மாற்றம்

Dec 12 2017 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரத ஸ்டேட் வங்கி தனது ஆயிரத்து 300 கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடுகளை அதிரடியாக மாற்றி உள்ளது.

வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ஐ.எப்.எஸ்.சி குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ஐ.எப்.எஸ்.சி குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, தனது ஆயிரத்து 300 கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடுகளை மாற்றி உள்ளது. அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் ஐ.எப்.எஸ்.சி குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00