புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

Nov 19 2017 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் உரிய சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்‍காமல் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிஆர்டிசியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என ஆயிரத்து 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1-ம் தேதியே ஊதியம் தரப்பட்டு வந்தது. இதனிடையே அண்மைக்காலமாக 5, 7 தேதிகளில் ஊதியம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத ஊதியம் புதுச்சேரியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு 11-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு தரப்படவில்லை. அதே போல் புதுச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் தரப்படவில்லை. இதைக் கண்டித்தும், பிஆர்டிசி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஊழியர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தங்களது கோரிக்‍கையை வலியுறுத்தி போக்‍குவரத்து கழக மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00