ரஃபேல் ஜெட் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சை - லாபகரமான ஒப்பந்தம் என இந்திய விமானப்படை தளபதி விளக்கம்

Nov 17 2017 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் ஜெட் போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் லாபகரமானது என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதில் மிகப்பெரியளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சர்ஜேவாலா குற்றம்சாட்டினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம், அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரி ஏற்கனவே விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவாக, இந்த ஒப்பந்தம் லாபகரமானது என இந்திய விமானப் படை தளபதி Air Chief Marshal பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தில் ஆயுதம், உதிரி பாகங்கள் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கான பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கும் என்று விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00