மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரை செய்யலாம் : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Aug 19 2017 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரை செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரை செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழிற்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த வகையில் பணியாற்றியவர்களை பரிந்துரை செய்து அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

இதுவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் பரிந்துரையின் பேரிலேயே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்ததாகவும், இனி மக்களின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00