பாகுபலி-2 திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையில் முன்னிலை : நேற்றுவரை இத்திரைப்படத்தின் வசூல் சுமார் 212 கோடி எனத் தகவல்

Apr 30 2017 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகுபலி-2 திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையில் முன்னணியில் இருந்து வருகிறது. நேற்றுவரை இத்திரைப்படத்தின் வசூல் சுமார் 212 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற பாகுபலி-1 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகியது.

பாகுபலி திரைப்படத்தின் மர்மம் நிறைந்த இறுதிக்காட்சியை காணும் ஆவலில் வயது வித்தியாசமின்றி பலரும் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் இப்படம் திரையிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஏராளமானோர் ரிசர்வ் செய்து டிக்கெட் பெற்றனர்.

அமெரிக்காவில் ஆன்லைன் முன்பதிவில் மட்டும் 19 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் திரையரங்குகளில் பாகுபலி-2 வெளியானது.

முதல் நாளிலேயே 125 கோடி ரூபாய் வசூலித்து இத்திரைப்படம் சாதனை படைத்தது. இரண்டாம் நாளான நேற்றுவரை இத்திரைப்படம் நாடுமுழுவதும் சுமார் 212 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஹிந்தியிலும் இப்படம் திரையிடப்பட்டிருக்கும் நிலையில், நேரடி ஹிந்திப் படங்களின் வசூலையெல்லாம் முறியடிக்கும் வகையில், முதல்நாளியே பாகுபலி-2, 58 கோடி ரூபாயை அள்ளியது. தமிழகத்தைப் பொறுத்தவரை 11 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 19 கோடி ரூபாயும், ஆந்திரா தெலங்கானாவில் 58 கோடியும் இத்திரைப்படம் மூலம் கட்டணம் வசூலாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00