ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நாளைமுதல் அமலாகிறது - மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல்

Apr 30 2017 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நாளைமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் திரு. வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இதுகுறித்து பேசிய திரு. வெங்கய்யா நாயுடு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போதே கொண்டுவரப்பட இருந்ததாகவும், ஆனால், அதனை அமல்படுத்த காங்கிரஸ் விரும்பியதில்லை என்றும் தெரிவித்தார். இந்த ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்ததும், அதுதொடர்பான விதிமுறைகளை கட்டுமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், 3 மாதங்களுக்குள் சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கூறினார். நாடு முழுவதும் உள்ள அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், RERA எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், விளம்பரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் திரு. வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00