ஜம்மு-காஷ்மீரின் Anantnag மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு - பனிக்குவியல்களில் சிக்கிய லாரிகள் உட்பட சுமார் 50 வாகனங்களை மீட்ட ராணுவத்தினர்

Jan 20 2017 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Anantnag மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய லாரிகள் உட்பட சுமார் 50 வாகனங்களை ராணுவத்தினர் மீட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் காணும் இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போன்று பனிப்படர்ந்து காணப்படுகிறது. பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி மாநில நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், Anantnag மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, Larikpura - Doru சாலை பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. இதனால், லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்கள் பனிக்குவியல்களில் சிக்கிக் கொண்டன. உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற ராணுவத்தினர், சுமார் 50 வாகனங்களை மீட்டனர். இந்த கடும் பனிப்பொழிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00