வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை : ரிசர்வ் வங்கி தகவல்

Dec 7 2016 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரிசர்வ வங்கியின் நிதிக் கொள்கையின் மறு சீராய்வு அறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இதில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு.உர்ஜித் பட்டேல் தலைமையில் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு.உர்ஜித் பட்டேல், வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை என அறிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியான ரெபோ விகிதம் 6.25 சதவிகிதம் என்ற அளவில் தொடரும் என கூறினார். 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 5.75 சதவிகிதம் என்ற அளவில் தொடர்வதாகவும், எஸ்.எல்.ஆர் எனப்படும் வங்கிகள் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் விகிதம் 20.75% என்ற அளவிலும் நீடிக்கும் என தெரிவித்தார். வங்கி வட்டி விகிதம் 6.75% என்ற அளவிலும் தொடர்வதாகவும் திரு.உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00