டெல்லியில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு : பயணிகள் கடும் அவதி

Dec 7 2016 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்படுகின்றன. இன்றும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் ரயில் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 81 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், 21 ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, டெல்லி விமான நிலையத்திலும்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 8 சர்வதேச விமானங்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், 3 விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. போதிய வெளிச்சமின்மையால் 5 உள்ளூர் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கான்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலை போக்குவரத்துஸ்தம்பித்துள்ளது.

இதனிடையே, மகாராஷ்ட்ர மாநிலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, Titwala-Khadawali இடையே ரயில்கள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ரயில் தண்டவாளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00