மும்பை தாக்குதல் போலவே மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் : இந்திய ராணுவ ரகசியங்களைத் திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்

Oct 28 2016 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை தாக்குதல் போலவே, மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன், இந்திய ராணுவ ரகசியங்களைத் திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பைக்கு, கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்ரயில்நிலையம், நட்சத்திர ஓட்டல்கள் என பல இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உளவு பார்த்த குற்றத்திற்காக நேற்று டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெஹ்மூத் அக்தர், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, இந்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக, ஐ.எஸ்.ஐ. மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவும்வகையில், இந்த சதி வேலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்றுபிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உளவு வேலை பார்த்ததாக ஏற்கனவே இருவர் கைதான நிலையில், ஷோயப் என்பவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00