பிரதமர் நரேந்திரமோடியுடன் நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு - என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைய ஆதரவு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை

Oct 26 2016 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர் John Key, பிரதமர் திரு. நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவை பலப்படுத்துவது, NSG என்று கூறப்படும் 'அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க, நியூசிலாந்து பிரதமர் John Key, நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமரை வரவேற்றார். அங்கு John Key-க்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, டெல்லி Raj Ghat-ல் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், நியூசிலாந்து பிரதமர் John Key, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், John Key பேச்சுவார்த்தை நடத்தினார். NSG-யில் இந்தியா உறுப்பினராக இணைய முயற்சி செய்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் திரு. மோடி, நியூஸிலாந்து பிரதமர் John Key-யிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நியூஸிலாந்து பிரதமர் John Key உடனான பிரதமர் திரு. மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00