ஆந்திராவில் போக்குவரத்து துறை ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் பறிமுதல்

Oct 26 2016 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலத்தில், போக்குவரத்து துறை ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த ஊழியருக்கு 14 வீடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 55 வயதான பூர்ணசந்திர ராவ் என்ற சாலை மற்றும் போக்குவரத்து துறை ஊழியர் ஒருவர், தனது 35 வருட பணிக்காலத்தில், சொந்தமாக 14 வீடுகள் வாங்கியிருப்பதை அறிந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அவரது ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வீட்டின் ஒரு அறை முழுவதும் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 20 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடந்த 1981-ம் ஆண்டு மோட்டார் வாகன பரிசோதகராக பணியில் சேர்ந்த பூர்ணசந்திர ராவ், இவ்வளவு சொத்துக்களையும், நகைகளையும் சேர்த்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குண்டூர் மாவட்டம் விணுக்கொண்டா நகரில், பருப்பு ஆலை ஒன்றும் அவர் பெயரில் இயங்கிவருவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பூர்ணசந்திர ராவிடம், ஆந்திரா ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00