சத்தீஷ்கர் மாநிலத்தில் காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை : மாவோயிஸ்டு ஒருவர் பலி - படுகாயம் அடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

Oct 26 2016 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஷ்கர் மாநிலத்தில் காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்தது. தாக்குதலில் மாவோயிஸ்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்த அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கிடையே உள்ள மலகாங்கிரி எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் பதுங்கு இடங்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், சத்தீஷ்கர் மாநிலத்திலும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நராயன்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் படுகாயம் அடைந்த அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00