மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

Oct 25 2016 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தீர்வு கண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க ஆட்சியின்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனைப் போக்கும் வகையில், குடிநீர் வசதிக்காக ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர்த் திட்டம், வைகை கூட்டுக்குடிநீர்த் திட்டம், காவேரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் என எண்ணற்றத் திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். அதன்படி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி ஆற்றுப் படுகையிலிருந்து மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதன்படி இப்பகுதிகளுக்கு தரைமட்ட மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குளோரின் ஏற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மட்டுமின்றி விளாச்சேரி, முனியாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் வீடுகள் தோறும் குடிநீர் தங்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதால், அப்பகுதி மக்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கத் தொட்டிகள், புல்வெளிகளுடன் கூடிய பூங்கா போன்று அமைக்கப்பட்டு, வாரந்தோறும் பராமரிக்கப்பட்டும், தூய்மைப்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00