டெல்லியிலிருந்து அமெரிக்காவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு பசிபிக் பெருங்கடல் மார்க்கமாக 14.5 மணி நேரத்தில் பறந்து ஏர் இந்தியா விமானம் சாதனை

Oct 24 2016 7:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு பசிபிக் பெருங்கடல் மார்க்கமாக 14 புள்ளி 5 மணி நேரத்தில் பறந்து சென்று ஏர் இந்தியா விமானம் சாதனை படைத்துள்ளது. உலகின் மிக நீண்ட தூர பயணம் என்ற பெருமையும் ஏர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் கடந்த வாரம் வரை இந்த மார்க்கத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கடந்து சென்று வந்தன. புதிய முயற்சியாக, பசிபிக் பெருங்கடல் வழியாக டெல்லியில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோ செல்லும் பயணத் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடுவில் வேறு எந்த நாட்டிலும் நிற்காமல், முழு தொலைவையும் 14 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து சென்று ஏர் இந்தியா விமானம் புதிய சாதனை படைத்துள்ளது. அட்லாண்டிக் மார்க்கத்தைக் காட்டிலும் பசிபிக் மார்க்கம் அதிக தூரம்கொண்டது என்ற போதிலும், காற்று சாதகமாக வீசியதால், பயண நேரம் சுமார் 2 மணி நேரம் குறைந்தது. மொத்தம் உள்ள 15 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவை ஏர் இந்தியா விமானம் வேறு எந்த நாட்டிலும் நிற்காமல், ஒரே மூச்சில் கடந்திருப்பது மற்றொரு பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00