எல்லையில் பதற்ற நிலை - நிலைமையை நேரில் பார்வையிட இந்திய ராணுவ தலைமை தளபதி இன்று காஷ்மீர் பயணம்

Oct 1 2016 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் வியாழக்கிழமை துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ள ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் முகாம் அமைத்து பயிற்சி பெறும் தீவிரவாதிகள், இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள Uri ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், Surgical Strike எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தி, எல்லையில் இருந்த 7 தீவிரவாத முகாம்களையும், அங்கிருந்த தீவிரவாதிகளையும் இந்திய ராணுவத்தினர் அழித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தியப் பகுதி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் வரக்கூடும் எனக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்திய கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் தாக்குதலை முறியடிக்க எல்லையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ள ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00