உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் கண்டனம்

Sep 29 2016 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Susan Rice கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் மாளிகை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 18-ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Susan Rice, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உரி சம்பவத்திற்கு காரணமான பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார்.

ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட Lashkar-e-Tayyiba, Jaish-e-Muhammad போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் மாளிகை எதிர்பார்ப்பதாக Susan Rice குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு காரணமானவர்கள் நீதியின்முன் கொண்டுவந்து நிறுத்தும் அமெரிக்காவின் முயற்சியை இரட்டிப்பாக்க அதிபர் ஒபாமா உறுதிபூண்டுள்ளதாகவும் Susan Rice தெரிவித்தார்.

இதனிடையே, உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை தாக்குதலுக்கு உதவியதாக கைதாகியுள்ள, Faisal Hussian Awan மற்றும் Ahsaan Khursheed ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gyarahbad பகுதியில் உள்ள Peer Chandna Sai என்ற இடத்திலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ இருவரும் உதவியுள்ளதாகவும் தெரிகிறது. அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள Muzaffarabad மாகாணத்தில் உள்ள Dharbang என்ற இடத்தை சேர்ந்தவன் என்றும், அவனது பெயர் Hafeez Ahmed என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் பயிற்சி கொடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00