கடல் மற்றும் வானிலை தொடர்பான ஆய்வுக்காக PSLV C-35 Rockert, 8 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்படவுள்ளது

Sep 25 2016 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடல் மற்றும் வானிலை தொடர்பான ஆய்வுக்காக PSLV C-35 Rockert, 8 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, PSLV மற்றும் GSLV ராக்கட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. வர்த்தக ரீதியாக வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்கா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, PSLV C-35 Rockert மூலம், ஸ்காட்சாட்-1 என்ற செயற்கைக்கோள், நாளை காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 48 மணிநேர 'கவுண்ட் டவுன்' நேற்று தொடங்கியது. இஸ்ரோ அமைப்பு விண்ணில் செலுத்தும் 37-வது ராக்கெட் இதுவாகும். கடல் மற்றும் வானிலை தொடர்பான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற இயலும். 371 கிலோ எடைகொண்ட ஸ்காட்சாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து சுமார் 720 கிலோ மீட்டர் உயர சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த செயற்கைகோளுடன் அமெரிக்கா, கனடா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைகோள்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00