அமெரிக்கா சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் - ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்றுகிறார்

Sep 25 2016 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். நியூயார்க் நகரில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 71-வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் இக்கூட்டத்தில், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் உரையாற்றி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்னையை மையப்படுத்தியே பேசினார். எனினும், ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் இதனை சற்றும் பொருட்படுத்தவில்லை. மேலும், ஷெரீப்பின் பேச்சுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரும் வகையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் உரையாற்றுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை நியூயார்க் சென்றடைந்த அவரை அந்நாட்டு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். ஐ.நா. பொதுச் சபையில் நாளை அவர் உரை நிகழ்த்துகிறார். பாகிஸ்தானுக்கு மேலும் பதிலடி தரும் வகையில் சுஷ்மா ஸ்வராஜின் உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியுறவு இணையமைச்சர் திரு. அக்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதான்கோட் மற்றும் Uri ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்கள் விரைவில் அந்நாட்டிற்கு கிடைக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டு மக்களை ஏமாற்றலாம் - ஆனால் உலகத்தை ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00