நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் - சோனியா, ராகுல் உட்பட 7 பேருக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

Aug 27 2016 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் 5 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய "நேஷனல் ஹெரால்டு" பத்திரிகை, 90 கோடி ரூபாய் அளவுக்கு கடனில் சிக்கித் தவித்ததால், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வெளிவராமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல்காந்தி ஆகியோர், காங்கிரஸ் கட்சி அறக்கட்டளையின் நிதியைக் கொண்டு, அந்த கடனை அடைத்ததுடன், தங்களது பெயரில் "Young Indian" என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. நேஷனல் ஹெரால்டு பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கியதன் மூலம், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மோசடி தொடர்பாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேருக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00