743 கோடி ரூபாய் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், முன்ஜாமீன் மனு மீது விசாரணை - தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டோர் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்

Aug 27 2016 7:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு அஞ்சி, தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனின் மனைவி காவேரி ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு தொடர்பாக இம்மூவரும் இன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தயாநிதிமாறன் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் திரு. சிவசங்கரனை மிரட்டி, நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்தார். இதற்கு கைமாறாக தயாநிதியின் சகோதரரான கலாநிதி மாறனின் சன் டி.வி.க்கு 743 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியது. இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரித்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி சன் டி.வி.யின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8-ம் தேதி அமலாக்கப் பிரிவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சி, தயாநிதிமாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அன்றைய தினமே முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, தயாநிதிமாறன், கலாநிதிமாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00