உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 149-ஆக அதிகரிப்பு

Aug 27 2016 7:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நீடித்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை யினால் அம்மாநிலத்தில் வாரணாசி, அலகாபாத், காசிப்பூர், பலியா உள்ளிட்ட 28 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பத்திரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பீகார் மாநிலமும் வரலாறு காணாத மழையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம், அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்தது. நேற்று வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மழை மற்றும் வெள்ளப் பெருக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளது. சிம்லா மாவட்டத்தில் கனமழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையோர மரங்கள் சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் கவலைதரும் வகையில், அடுத்த சில நாட்களுக்கும் கனமழை தொடரும் என்று அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00