ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான 22 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியான சர்ச்சை - பிரான்சில் இருந்தே ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக, ஆஸ்திரேலிய பத்திரிகை பரபரப்பு தகவல்

Aug 25 2016 7:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடற்படைக்காக, பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த அதிநவீன ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிரான்சில் இருந்தே கசிந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடற்படைக்காக, ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா தயாரித்து வரும் அதிநவீன ஸ்கார்பீன் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பாக சுமார் 22 ஆயிரம் பக்கங்கள் அளவிலான ஆவணங்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத்துறையை பெரும் அதிர்ச்சியடைய செய்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க கடற்படை தலைமை தளபதிக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிந்ததாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும், இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார். 'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் உத்திகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நீர்மூழ்கிக் கப்பலில், கடலுக்கடியில் செயல்படும் சென்சார் குறித்தும், நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் உத்திகள், தொலைத்தொடர்புகள் மற்றும் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகையின் கூற்றின்படி இந்த ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டால் இந்தியாவுக்காக கணினியில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதே ஆண்டு டி.சி.என்.எஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் அதிகாரியால் இந்த ஆவணம் நீக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன், ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00