ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி Burhan Wani சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துகண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்த பிரிவினைவாத தலைவர் கைது செய்யப்பட்டதால் பதற்றம் : பல்வேறு இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்

Jul 30 2016 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி Burhan Wani சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய கண்டன பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்த பிரிவினைவாத தலைவர் கிலானி கைது செய்யப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில், கடந்த 8-ம் தேதி லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி Burhan Wani உட்பட 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதி Burhan Wani கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குல்காமில் உள்ள புகழ்பெற்ற ஜமியா மசூதி நோக்கி நேற்று மிகப்பெரிய கண்டன பேரணி நடத்த பிரிவினைவாத தலைவர் சயத் அலி கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிலானி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிலானி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஸ்ரீ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் வன்முறையில் காயமடைந்த ஆயிரக்கணக்கானனோரின் நிலை குறித்து மருத்துவர்களிடம் அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00