பதான்கோட் விமானப் படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் : ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரத்தை, இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பிடம் வழங்கியது அமெரிக்கா

Jul 30 2016 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான் என்பதற்கான ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரத்தை, இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பிடம், அமெரிக்கா வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றதன் பின்னணியில், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டிருப்பதை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரத்தை, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பிடம், அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த ஆதாரத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட Kashif Jaan-க்கும், தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட நவீன தகவல் சாதனங்களின் உதவியுடன் அவர்கள் உரையாடியிருப்பதும், தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகள் இதனை தெரிவிக்க பயன்படுத்திய செல்போன் எண்ணில் இருந்துதான் Kashif Jaan பயன்படுத்திய முகநூல் செல்போன் எண்ணிற்கு தகவல் பரிமாற்றம் நடந்திருப்பதும் ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிதி நிறுவனமான Al-Rahmat என்ற அறக்கட்டளை எண்ணுடன் தீவிரவாதிகள் அவ்வபோது தொடர்புக் கொண்டு, பேசியிருப்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், அமெரிக்கா இந்த ஆயிரம் பக்க ஆதாரத்தை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதியாக பாகிஸ்தான் அறிவிக்கக் கோரி, அமெரிக்கா வழங்கியுள்ள ஆதாரங்களை அந்நாட்டு அரசிடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00