ஜம்மு-காஷ்மீர் நிலவரம் - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jul 30 2016 7:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய கள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தளபதி பர்கான் வானி கடந்த 8-ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவையும் மீறி அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பாதுகாப்பு படையினர் உள்பட சுமார் 50 பேர் பலியாகினர். இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியதையடுத்து, ஸ்ரீநகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில தேசிய பாந்தர்ஸ் கட்சியின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பீம்சிங், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீரில் காயமடைந்த பலருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய கள நிலவரம் குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00